திருகோணமலையில் பசு மீது மோதிய மோட்டார்சைக்கிள் - இளைஞர் வைத்தியசாலையில்
திருகோணமலை உட்துறைமுக வீதியில் நேற்று (22) இரவு சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் மோதிய பசு உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டு
இந்த விபத்துக்கு முழுப் பொறுப்பும் திருகோணமலை மாநகரசபையின் தொடர்ச்சியான கவனயீனமே எனப் பொதுமக்கள் மத்தியில் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த உட்துறைமுக வீதியில் மாலையளவில் பல மாடுகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி நடமாடித் திரிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தரணிகளின் கருத்துப்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாநகர சபைக்கு எதிராக வழக்குத் தொடரக்கூடிய வாய்ப்பு சட்டத்தில் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து மாநகர சபை தவறியமையே இந்த விபத்துக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
பொதுமக்கள் கோரிக்கை
திருகோணமலை நகர் பகுதியில் மாடுகளின் நடமாட்டம் என்பது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு பிரச்சினையாகும். இனியும் மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பின்றிச் செயற்படுமானால், இது போன்ற விபத்துக்களாலும் அதனால் ஏற்படும் உயிர்ப்பலிகளாலும் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க முடியாது. எனவே இது குறித்து மாநகர சபை விரைவில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri