மின் கம்பத்தில் மோதிய மாநகரசபை வாகனம்! இ.மி.சபையின் திருகோணமலை மின் அத்தியட்சகர் தெரிவித்துள்ள விடயம்
திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் தபால் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் திருகோணமலை மின் அத்தியட்சகர் குமார சுவாமி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாநகரசபைக்கு சொந்தமான கெப் வாகனமொன்று நேற்று (12.01.2023) மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து பிரதான மின் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டிருந்தது.
குறித்த வாகன விபத்தினால் சற்று நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை மின்சார சபைக்கு பல இலட்சம் ரூபா செலவு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் திருகோணமலை மின் அத்தியட்சகர் குமாரசுவாமி கூறியுள்ளார்.
விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார்
கிழக்கு மாகாணசபையிலிருந்து திருவண்ணாமலை மாநகரசபைக்கு குறித்த வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதுடன், வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவ்விபத்தில் சாரதி மற்றும் கணக்காளர் காயம் அடைந்துள்ளதுடன், விபத்து
தொடர்பான விசாரணைகளை திருகோணமலை துறைமுக
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




