மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து கேகாலையில் மாவனெல்லை - ஹெம்மாத்தகம வீதியில் இடம்பெற்றுள்ளது என மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த நாய் மீது மோதி கவிழ்ந்து பெண் பாதசாரி மீது மோதி பின்னர் அருகிலிருந்த கொங்கிரீட் கல்லில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை முன்னெடுப்பு
இதன்போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் வீதியில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 11 மணி நேரம் முன்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
