யாழில் தாயின் கண்முன்னே பிரிந்த மகனின் உயிர்! லொறி மீது தாக்குதல் நடத்திய மக்கள் (Photo)
யாழ்ப்பாணம், சத்திர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிள் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
விபத்து நேர்ந்த போது மோட்டார்சைக்கிளில் தாயும், மகனும் பயணித்துள்ளனர்.
இதன்போது லொறியின் சில் சிறுவனின் தலையில் ஏறிய நிலையில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அங்கு ஒன்று கூடியவர்கள் லொறியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த அஜித்தன் அபிநயன் (வயது 10) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.