50 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி: ஒருவர் பலி - மூவர் படுகாயம் (VIDEO)
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
டிக்கோயா பகுதியிலிருந்து டிக்கோயா பெரிய மணிக்வத்தை பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி நேற்று இரவு 7 மணியளவில் பெரிய மணிக்வத்தை தோட்டத்திற்கு செல்லும் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
சாரதியால் முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் டிக்கோயா பெரிய மணிக்வத்தை பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தராஜ் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை விபத்தில் படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.



வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
