லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து 2 இளைஞர்கள் மாயம்
அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மீன்பிடிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளனர்.
நேற்று மாலை லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்ற போதே எதிர்பாராத விதமாக இந்தப் படகு கவிழ்ந்துள்ளது.
பொலிஸாரின் தகவல்
இதில் பயணித்த 18 வயதுடைய இரண்டு இளைஞர்களே நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போன இளைஞர்களைக் கண்டறியும் பணிகளுக்காக திஸ்ஸமஹாராம கடற்படைப் பிரிவு மற்றும் விசேட சுழியோடிகள் பிரிவு என்பன இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை இளைஞர்கள் குறித்த எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு News Lankasri