கனடாவில் அடிப்படை மருத்துவ சேவைகளை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
கனடாவில் அடிப்படை மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் மேலும் நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் ஆறு மில்லியன் மக்கள் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான கனேடியர்களினால் குடும்ப மருத்துவரின் அடிப்படை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
துறைசார் சிகிச்சைகள்
இதன் போது குடும்ப மருத்துவர்கள் வேறு சேவைகளில் ஈடுபடுவதில் நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குடும்ப மருத்துவர்கள் ஏதேனும் துறைசார் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் அந்த சிகிச்சையில் கூடுதல் நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக அடிப்படை மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் சவால்களையும் சிரமங்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக கனேடிய சுகாதார தகவல் நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், கோவிட் பெருந்தொற்றின் பின்னர் மருத்துவ சேவைகளின் தரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
