அமெரிக்காவில் பாலத்தில் மோதிய கப்பல் : விபத்திற்கான காரணம் வெளியானது
அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்துக்கு கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதே காரணம் என தெரியவந்துள்ளது.
பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு 289 மீற்றர் நீளம் கொண்ட டாலி என்ற கப்பல் இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
அதன் பயணம் 27 நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கப்பலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இயந்திரம் செயற்பாட்டை இழந்துள்ளது.
Major bridge in US state of Maryland collapses after cargo ship collision pic.twitter.com/YTBaLewgBd
— Civil Engineering Discoveries (@CivilEngDis) March 27, 2024
இது தொடர்பில் கப்பலின் தலைமை அதிகாரி பாதுகாப்பு படையினருக்கு அறிவித்திருந்த போதும் மிதந்து கொண்டிருந்த கப்பல் பால்டிமோர் பாலத்தில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பாலம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அதில் பயணித்த பல வாகனங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி நீர்மூழ்கி நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து கொழும்பு நோக்கிய பயணம் : விபத்து சம்பவிப்பதற்கு முன்னர் கப்பலில் ஏற்பட்ட மாற்றங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |