காலிஸ்தான் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கனேடிய பொலிஸ் அதிகாரி
சார்ஜென்ட் ஹரிந்தர் சோஹி (Harinder Sohi) என்ற கனடாவின் பொலிஸ் அதிகாரி, அண்மையில் பிராம்டனில் இந்துக்கோயில் தாக்கப்பட்டபோது, காலிஸ்தான் கொடியை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் பங்கேற்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சட்டத்தின்படி இடைநீக்கம்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்தியாவுக்கு எதிரான கோசங்களை எழுப்பிய நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி, சாதாரண உடையில், காலிஸ்தானிய கொடியை கையில் ஏந்தி அந்த போராட்டத்தில் பங்கேற்றமையை காணொளிகள் நிரூபித்துள்ளன.

ஹரிந்தர் சோஹி, 18 வருடங்களாக கனேடிய பொலிஸில் சேவையாற்றி வருகிறார்.
இந்தநிலையில், கடமை தவறிய இந்த அதிகாரி, போராட்டத்தில் கலந்து கொண்டதை, பீல் பொலிஸ் துறையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் சின் உறுதிசெய்துள்ளார்.
இதனையடுத்து அவர் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சட்டத்தின்படி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri