15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் - 64 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 64 வயதுடைய நபருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மாத்தளை வேவல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மே 5, 2008 அன்று, சந்தேக நபரின் வீட்டில் சிறுமி கூரிய ஆயுதத்தைக் காட்டி மிரட்டப்பட்டுள்ளார். இதன்படி, நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பை மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹன ஜயவர்தன இன்று அறிவித்தார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது வாடிக்கையாளரின் வயதை கருத்திற் கொண்டு அவருக்கு தண்டனை வழங்குமாறு நீதிமன்றில் கோரினார்.
ஆனால் சிறுமியொருவரின் இந்த துஷ்பிரயோகத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
150,000 ரூபா நட்டஈடு வழங்க உத்தரவு
சமூகத்திற்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் தண்டனை வழங்குமாறும் அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
அதன்படி அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சிறுமிக்கு 150,000 ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மொரட்டுவையில் உள்ள பாடசாலை நூலகம் ஒன்றில் 12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நூலகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
61 வயதான நூலகர் நூலகத்திற்கு புத்தகமொன்றை கையளிப்பதற்காக வந்த போதே இவ்வாறு நடந்துகொண்டதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதன்படி மொரட்டுவ பொலிஸார் நூலகரை கைது செய்தனர்.