வாக்களிப்பில் பங்கேற்காதோர் வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்பு அல்ல: ரணில்
வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு என்று எவரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. தவறிழைத்தோர் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தீர்க்கமாக முடிவெடுக்க சந்தர்ப்பம் உண்டு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் நேற்று (23.11.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த சதி முயற்சியாலும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. இதனை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் முடிவு எடுத்துக் காட்டுகின்றது.

வரவு செலவுத் திட்டம்
நாடு மீதும் மக்கள் மீதும் அக்கறையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்கவே வேண்டும்.
எமது நாடு மீண்டெழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சுயநல அரசியல் எண்ணம் கொண்டவர்கள், எதிராக வாக்களித்துள்ளனர். அதேவேளை, வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள் எதிர்ப்பு என்று எவரும் அர்த்தம் கொள்ளக்கூடாது.

மூன்றால் வாக்கெடுப்பு மீதான வாசிப்பு
தவறிழைத்தோர் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தீர்க்கமான முடிவெடுக்கச் சந்தர்ப்பம் உண்டு என தெரிவித்துள்ளார்.
மேலும், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam