ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்கிறாரா கோட்டாபய...! ஜனாதிபதி ஊடகப் பேச்சாளரின் தகவல்
பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசித்து வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றன.
எனினும் இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. இது போன்றதொரு நெருக்கடியான சூழ்நிலையில் தப்பிச் செல்லும் நபர் ஜனாதிபதி அல்ல.
தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுத்து வருகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆளும் கூட்டணி கட்சிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் அலரி மாளிகையில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்டாயம் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் பற்றாக்குறை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் இந்த சந்திப்பிற்கு முன்னதாக நாளைய தினம் முற்பகல் வேளையில் பிரதமர் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
