சுமார் நான்கு லட்சம் தடுப்பூசிகள் நேற்றைய தினம் ஏற்றப்பட்டுள்ளது
சுமார் நான்கு லட்சம் கொவிட்19 தடுப்பூசிகள் நேற்றைய தினம் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாளில் இலங்கையில் ஏற்றப்பட்ட அதி கூடிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் நாடு முழுவதிலும் 384763 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இந்த புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
338572 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் மருந்தளவும், 35410 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவும் ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் 3365 பேருக்கு ஸ்புட்னிக்வீ கொவிட் தடுப்பூசியின் முதல் மருந்தளவு ஏற்றப்பட்டதாகவும், 7416 பேருக்கு பைசர் கொவிட் தடுப்பூசியின் முதல் மருந்தளவு ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
