சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 150,000 மின்சார பாவனையாளர்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 150,000 மின்சார பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி மேம்பாட்டுப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுலட்சனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றும், நேற்றும் கிட்டத்தட்ட 22,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 150,000 பாவனையாளர்கள் நேற்றும் இன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கண்டி, மாத்தளை, தம்புள்ளை, கலகெதர, நுவர-எலியா, குருநாகல், குளியாப்பிட்டி, களனி, கிரிபத்கொட, பலாங்கொட, ரத்னபுரி, காலி, மாத்தறை, நெலுவ மற்றும் தெனியாய போன்ற பகுதிகள் மின் தடை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உரிய பராமரிப்பு சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
ஜெயவர்தன மேலும் கூறியுள்ளார்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam