சதம் அடித்தவுடன் அபிஷேக் சர்மா எடுத்து காட்டிய துண்டு சீட்டு: பேசுபொருளாக மாறிய விடயம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆரம்ப துடுப்பெடுத்தாளர் அபிஷேக் சர்மா, சதம் அடித்தவுடன் எடுத்து காட்டிய துண்டு சீட்டு தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த துண்டு சீட்டில் 'This one is for orange army' என எழுதப்பட்டிருந்தது.
அதாவது, இந்த சதத்தை நான் சன்ரைசர்ஸ் அணியின் ரசிகர்களுக்காக சமர்ப்பிக்கிறேன் என்பதே அதன் அர்த்தமாகும்.

அபிஷேக் சர்மாவின் சதத்துடன் அபார வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி! புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
மோசமான துடுப்பாட்டம்
சன்ரைசர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பெடுத்தாளரான அபிஷேக் சர்மா நடப்பு IPL தொடரில் நடந்த முதல் 5 போட்டிகளிலும் பெரிதாக சோபிக்கவில்லை.
ABHISHEK SHARMA WHAT A PLAYER...!! 💯💯🤯🔥🔥#AbhiraSharma #PBKSvsSRH #srhpic.twitter.com/vL6uxuLxT1
— 𝐓𝐡𝐞 𝐑𝐮𝐧𝐌𝐚𝐜𝐡𝐢𝐧𝐞 🜲 (@Iamlakshya_18) April 12, 2025
அவர் மொத்தமாக 5 போட்டிகளிலும் வெறும் 51 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார்.
வழக்கமாக அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் அபிஷேக் சர்மா, இந்த IPL தொடரில் ஒரு 6 ஓட்டங்களை கூட பெற்றிருக்கவில்லை.
ரசிகர்களிடையே வரவேற்பு
இவ்வாறிருக்க, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 246 என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய அபிஷேக் சர்மா, பத்து 6 ஓட்டங்கள் மற்றும் பதின்நான்கு 4 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 55 பந்துகளில் 141 ஓட்டங்களைப் பெற்று சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
கடந்த போட்டிகளில் அவர் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போதும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த அணி நிர்வாகத்திற்கும் தொடர்ந்து ஆதரித்த ரசிகர்களுக்கும் அவர் இந்த சதத்தை சமர்ப்பித்துள்ளார்.
அபிஷேக் சர்மாவின் இந்த ஒரு செயல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |