பிரதி சபாநாயகருக்கு வழங்கப்பட்ட அப்துல் கலாம் விருது
இலங்கையின் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு (Ranjith Siyambalapitiya) இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலாம் (Dr.Abdul Kalam) பெயரில் வழங்கப்படும் விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவருக்கு அப்துல் காலம் விருது வழங்கப்பட்டுள்ளது.
மின்சாரம், புத்தாக்க மின்சக்தி அமைச்சர் என்ற வகையில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இலங்கைக்குள் புத்தாக்க மின்சக்தியை ஊக்குவிப்பதற்காக மேற்கொண்ட விசேடமான பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, அனைத்து வீடுகளுக்கு மின் விநியோகம் உட்பட இலங்கையின் மின்சக்தி துறையின் முன்னேற்றத்திற்கு ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய செய்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக விருது வழங்கும் பரிந்துரைக்குழுவின் தலைவரும் லீடர் இந்தியா அமைப்பின் தலைவருமான கலாநிதி ஹரி கிருஷ்ணா (Hari Krishna) விருது வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
