பாணந்துறை நகரில் கைவிடப்பட்ட வயதான பெண்மணி
பாணந்துறை நகரில் கைவிடப்பட்ட நிலையில் வயோதிப பெண்ணொருவர் நேற்று மீட்கப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான பெண்மணி

கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான இந்த பெண்மணியை யாரே அழைத்து வந்த பாணந்துறை நகரில் கைவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அந்த பெண்மணி பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்கப்படும் வரை பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த பெண்மணியின் அடையாளமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

பாணந்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் சாமிந்த பிங்துவின் ஆலோசனைக்கு அமைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இரேஷா குமாரசிங்கவின் நெறிப்படுத்தலில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
முதிய வயதில் பெற்றோரை கைவிடும் பிள்ளைகள்

இலங்கையில் மாத்திரமல்லாது இந்தியா போன்ற நாடுகளிலும் வயதான பெற்றோர் அல்லது உறவினர்கள் வீதிகளில் கைவிடப்படும் அவல நிலைமை காணப்படுகிறது.
பெரும்பாலான முதியோர்களை பிள்ளைகள் பராமரிக்காது அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சென்று விடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
தம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களின் முதிய வயதில் பாதுகாத்து பராமரிப்பது பிள்ளைகளின் கடமை மாத்திரமல்லது பொறுப்புக்கூட என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
படத்திற்கு நல்ல வரவேற்பு.. ஆனால், நெட்டிசன்களிடம் திட்டு வாங்கும் நடிகர் ஜீவா.. காரணம் என்ன Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam