வவுனியாவில் பிள்ளைகளினால் கைவிடப்பட்ட தாயொருவர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா பழைய பேருந்து நிலைய கட்டடத்திற்குள் நீண்ட காலமாக தங்கியிருந்த வயோதிப் பெண்மணி ஒருவர் பல்வேறு நோயினால் பிடிக்கப்பட்டுள்ளார்.
பிள்ளைகளினால் கைவிடப்பட்டு யாகசம் பெற்று வந்த குறித்த வயோதிய பெண்மணி இன்று பல்வேறு நடவடிக்கையின் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பேருந்து நிலையத்தில் நீண்ட காலமாக தங்கியிருந்து யாகசம் பெற்று வந்த குறித்த வயோதிப தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக பல்வேறு நோயினால் பிடிக்கப்பட்டிருந்தமை அப்பகுதியிலிருந்த வர்த்தர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இதையடுத்து வர்த்தகர் சங்கத்தின் உதவியுடன் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் தற்காலத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றினால் வயோதிபர்கள் இல்லத்தில் அனுமதிப்பதற்கு பல்வேறு தடைகள் காணப்பட்டுள்ளது .
இந்நிலையில் அவரை முதற்கட்ட நடவடிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சையளிப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக நடவடிக்கை இன்று எடுக்கப்பட்டு
குறித்த வயோதிப பெண்மணி பேருந்து நிலையத்திலிருந்து அழைத்து
செல்லப்பட்டுள்ளார் .

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
