முச்சக்கர வண்டியில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை
தலவாக்கலை நகரில் கோயில் ஒன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு,குழந்தையை லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமந்த பெரேரா தலைமையிலான அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். குறித்த முச்சக்கர வண்டி தினமும் கோயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
முச்சக்கர வண்டியில் பின்புற ஆசனத்தில் கிடந்த குழந்தை
நகரை துப்பரவு செய்யும் பணிக்காக கோயிலுக்கு அருகில் சென்ற தலவாக்கலை-லிந்துலை நகர சபையின் ஊழியர்களுக்கு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
அதனை தேடிப்பார்த்த போது முச்சக்கர வண்டியின் பின்புற ஆசனத்தில் பச்சிளம் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது. ஊழியர்கள் அது குறித்து உடனடியாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
பிறந்து 12 முதல் 14 நாட்களே ஆன இந்த பெண் குழந்தை உடல் நலத்துடன் இருப்பதாகவும் பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மூலம் குழந்தைக்கு பால் கொடுத்து, குழந்தையை லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைத்ததாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் குழந்தையை கைவிட்டு சென்றது யார் என்பதை கண்டறிய பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கெமராக்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
லிந்துலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மேலதிக பராமரிப்புக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
