கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு!
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்றைய தினம் (07.04.2023) தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து, இந்த பணிப்புறக்கணிப்பினை கைவிட்டு சேவைக்குத் திரும்பியதாகத் தேசிய நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பிரச்சினை
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
சுகயீன விடுமுறை கொடுப்பனவிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பால் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாது உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கோரிக்கைக்குத் தீர்வு
இதன் காரணமாக நீர் விநியோகம் தடைப்படலாம் எனவும், இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றதால் இன்று பணிப்புறக்கணிப்பினை கைவிட்டு சேவைக்குத் திரும்பியதாக உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.