கிளிநொச்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலி
கிளிநொச்சி – பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது நாவற்குழி செல்லும் A-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் இன்று(11.08.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது, யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், விபத்து தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan