கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் கொடூரமாக படுகொலை!
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 30 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த இளைஞனின் தந்தையின் சகோதரனே இக்கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (30) காலை காணியின் எல்லை தொடர்பில் உயிரிழந்த நபருக்கும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று மதியம் கொலையுண்ட இளைஞரின் வீட்டிற்கு மரம் வெட்டும் இயந்திரத்துடன் சென்று குறித்த இளைஞரை கால் மற்றும் கையை வெட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் இளைஞனை பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan