தாய் கையடக்கத் தொலைபேசியை தர மறுத்ததால் விபரீத முடிவை எடுத்த யுவதி !
தாய் தொலைபேசியை கொடுக்க மறுத்தமையினால், 19 வயதுடைய யுவதி ஒருவர் அறைக்குள் நஞ்சு அருந்திய நிலையில் தூங்கிக் கிடந்ததாக குறித்த யுவதியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
வயலுக்கு செல்லும் போது தனக்கு கையடக்கத் தொலைபேசியை தந்துவிட்டு செல்லுமாறு தாயிடம் கூறியபோது தாய் தரமுடியாது. என சொல்லிவிட்டு, கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வயலுக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பியபோது குறித்த யுவதி அறைக்குள் நஞ்சு அருந்திய நிலையில் தூங்கிக் கிடந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
குறித்த யுவதி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை, அதிதீவிர சிகிச்சைப்
பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.



