திருமணத்திற்கு தாயரான இளம் யுவதி பரிதாபமாக பலி - ஆபத்தான நிலையில் காதலன்
ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே காதலி மரணமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மரணமடைந்த காதலி, தனியார் நிறுவனமொன்றில் காசாளராக கடமையாற்றுகின்றார். திருமண வைபவத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போதே, இவ்வாறு விபத்துக்குள் சிக்கியுள்ளனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற ரயில் கடவையில், சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்துள்ளது எனும், அந்த ரயில் கடவைக்கு, பாதுகாப்பான படலை இல்லையென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri