இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை
இரத்தினபுரி பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நிரியல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் குறித்த யுவதி தனது பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் படித்து சில மாதங்களுக்கு முன்பு பட்டம் பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
