யாழில் தவறான முடிவெடுத்து சிகிச்சை பெற்று வந்த யுவதி உயிரிழப்பு..
தவறான முடிவெடுத்த யுவதி ஒருவர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்(16) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி ஆனந்தபுரத்தை சேர்ந்த நாகநாதன் கிருஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யுவதி உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த யுவதி மன விரக்தி காரணமாக கடந்த 14ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்துள்ளார்.
அவரை மீட்டு அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 15ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri