கோவிட் தொற்றுடன் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தனிமைப்படுத்தல் சட்டமுறைகளை மீறி கோவிட் தொற்றுடன் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞரை அங்கு தனிமைப்படுத்துமாறும், எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கோவில்குளம், 5ஆம் ஒழுங்கையில் வசிக்கும் வயதான பெண் ஒருவருக்கும், இளைஞன் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த வயதான பெண்ணுக்கு நோய் தாக்கம் அதிகரித்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது செவ்வாய்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருந்தார்.
இவரின் மரணத்தையடுத்து உடலத்தை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த சுகாதாரப் பிரிவினர், தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்ற போது அங்கு தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞனை காணவில்லை.
இதனையடுத்து அங்கு இருந்த உறவினர்களிடம் விசாரித்த போது அவர் யாழ்ப்பாணம் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறையை மீறி கோவிட் தொற்றுடன் யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் ஊடாக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கினை விசாரித்த வவுனியா நீதிமன்றம் குறித்த இளைஞனை தற்போது அவர் நிற்கும் இடத்தில் தனிமைப்படுத்துமாறும், எதிர்வரும் 24 ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறும் கட்டளை பிறப்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri