கிண்ணியா பாலத்துக்கு அருகில் நீரில் மூழ்கி இளைஞரொருவர் மரணம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா பைசல்நகர் தாமரைவில் பகுதியைச் சேர்ந்த மௌஜுத் பர்ஸான் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு இளைஞர்கள் கடலில் குளிப்பதற்காகச் சென்ற போது அதில் ஒருவர் நீந்த முடியாத நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவரது சடலம் பொதுமக்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் தற்போது கடற்கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
