கிளிநொச்சியில் விபத்து! இளம் குடும்பஸ்தர் பலி
கிளிநொச்சி இருந்து தருமபுரம் நோக்கி நேற்று(29.05.2023) மாலை பயணித்த மோட்டார் சைக்கிளும் புது
குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக (
பட்டா) வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பொழுது அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தியாகராசா சஞ்சீவன் 36 வயதுடைய தருமபுரம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிழந்துள்ளார்.
விபத்துக்கான காரணம்
காயமடைந்தவர் மேலும் ஒருவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதிக மது போதையில் பயணித்ததாலே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
