தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டும்: அரசியல் ஆய்வாளர் கோரிக்கை
தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் அபாயம் இருப்பதாக சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) உரும்பிராயிலுள்ள தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு - கிழக்கு
அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது.
மேலும், அநுர அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களிடம் இருந்து அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் கையாண்டு மக்கள் மத்தியில் ஓர் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருக்கிறது. இது ஒரு ஆபத்தான நிலைமையாகும்.
இதனை தடுப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும் என்றும். இவ்வாறான நடவடிக்கை அனைத்து சிவில் சமூகங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
