ஜனாதிபதியின் யாழ் வருகை: நாளைமுதல் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

Jaffna Anura Kumara Dissanayaka SL Protest Northern Province of Sri Lanka
By Kajinthan Jan 28, 2025 12:54 PM GMT
Report

ஜனாதிபதியின் யாழ். வருகையை முன்னிட்டு வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று (28) ஊடக சந்திப்பை மேற்கொண்டு வடமாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கி.டனிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு சரியான வகையில் இதுவரை எந்தவொரு தரப்பினரும் தீர்வை தரவில்லை.

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கின் ஆளுநரிடமும் பல தடவைகள் கோரிக்கை முன்வைத்திருந்தும் அவரும் எம்மை கண்டு கொள்ளாதவராகவே இருந்து வருகின்றார்.

இந்தநிலையில், வேலையற்ற பட்டதாரிகள் ஆகிய நாம் நாளை (29.01.2025) முதல் 31ஆம் திகதி வரை எமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

ஜனாதிபதியின் யாழ் வருகை: நாளைமுதல் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் | Anura Visit To Jaffna Unemployed Graduates Protest

குறிப்பாக எமது மூன்று நாள் போராட்டமானது 29 ஆம் திகதி நாளையதினம் பசுமை தானம் என்னும் தொனிப்பொருளில் மரக்கன்று விநியோகித்தலுடன் யாழ் வீரசிங்கம் மண்டபம் முன்றலில் ஆரம்பிக்கப்படுவதுடன், 30 ஆம் திகதியன்று கலைத்தூது கலையரங்கில் இரத்த தான முகாமும் நடைபெறவுள்ளது.

இறுதி 31 ஆம் திகதியன்று ஜானாதிபதியின் யாழ். வருகையை முன்னிட்டு மாவட்ட செயலகம் முன்பாக பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எமது நிலையை எடுத்துக் கூறும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாணம் தழுவிய ரீதியில் உள்ள பட்டதாரிகளின் சார்பில் ஒலிக்கும் குரலாக இது நடைபெறும் எனவும் எமது இந்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்க அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது: ஆளுநர் தெரிவிப்பு

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது: ஆளுநர் தெரிவிப்பு

வேலைவாய்ப்பு

இதேவேளை, குறித்த சங்கத்தின் தலைவர் சசிதரன் கூறுகையில், வேலையற்ற பட்டதாரிகள் என்ற வகைக்குள் கலைத்துறையில் பட்டங்களை பெற்றவர்களே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைக்கு நாட்டின் கல்வி கட்டமைப்பே காரணமாக இருக்கின்றது.

ஜனாதிபதியின் யாழ் வருகை: நாளைமுதல் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் | Anura Visit To Jaffna Unemployed Graduates Protest

நாட்டின் கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம். எமக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை கொண்டிருக்ககூடிய அரசினதே ஆகும்.

வடமாகாணத்தில் இன்று பல்வேறுபட்ட திணைக்களங்களில் வேலைவாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது. இலங்கை அரச கட்டமைப்பின் பட்டபடிப்பு மூலமே நாம் கல்வித் தகுதியை பெற்றுள்ளோம். அதற்குரிய தொழில்வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே நாம் இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.

இதேநேரம் ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு எமது நிலைப்பாடுகள் அடங்கிய கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளோம். மேலும் அரசாங்கம் உருவாகி சில மாதங்களே கடந்துள்ளது.

இந்த அரசாங்கமாவது எமக்கான தீர்வை தரும் என நாம் எதிர்பார்த்தோம். அதுவும் ஏமாற்றமாகவே இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US