யாழில் நகை உற்பத்தியாளர் எடுத்த விபரீத முடிவு
யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் நகை உற்பத்தியாளர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று(30.12.2024) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நகை உற்பத்தியாளரும் அவரது மகனும் கன்னாதிட்டி பகுதியில் உள்ள நகை உற்பத்தி செய்யும் இடத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், குறித்த நபர் இன்று வேலைக்காக சென்றிருந்தார்.
மரண விசாரணைகள்
இதனையடுத்து, மகன் வேலைக்கு சென்றபோது அங்கு தந்தை மயக்கமடைந்து இருந்ததை அவதானித்தார். குறித்த விடயத்தை தாய்க்கு தெரியப்படுத்திய மகன், தாயை அழைத்து, மயக்கமடைந்த தந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.
இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |