முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு (Mullaitivu) - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது, இன்று (29.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணை நேற்று (28) இரவு தொடக்கம் காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள், கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
இருப்பினும், அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இன்று (29) காலை வீட்டு கிணற்றுக்குள் அவரின் சடலம் இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பிரேத பரிசோதனை
இதனை தொடர்ந்து, பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, குறித்த சம்பவத்தில் டெனிஸ்குமார் தெரினா என்ற 30 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் திருமணமான பின்பு கணவருடைய வீட்டில் மாமன் மற்றும் மாமியுடன் வசித்து வந்ததாகவும் அவருக்கு 5 வயதுடைய ஒரு மகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பெண்ணின் கணவர் புலம்பெயர் நாடு ஒன்றில் வசித்து வரும் நிலையில் பெண்ணின் மரணம் குறித்து சமூகத்தில் பல கேள்விகள் எழும்பியுள்ளன.
இந்நிலையில், பெண்ணிண் சடலமானது, பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
