மட்டக்களப்பில் பெண் ஒருவரிடமிருந்து நூதனமான முறையில் மோசடி
மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவருக்கு அமெரிக்காவிலிருந்து பெருந்தொகையான பணத்தை பெறப்போவதாக ஆசை காட்டி மோசடி சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கத்தைய பெண் ஒருவர் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவருடன் வாட்ஸ் அப் மூலம் நீண்ட காலமாக நட்புறவாடி வந்துள்ளனர்.
இந்நிலையில் "உங்களுக்கு பெரும் பணம் தங்க ஆபரணங்கள் வெகு விரைவில் கிடைக்கும் தான் பெரிய பணக்காரர்" என குறித்த பெண்ணிடம் அமெரிக்க நண்பி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவதினமான நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசியின் இலக்கத்தில் இருந்து வட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் விமான நிலைய சுங்க திணைக்களத்தில் கடமையாற்றி வருதாகவும் உங்களுக்கு அமெரிக்காவில் உள்ள உங்கள் நண்பி பொதியொன்றை ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காணொளி மூலம் பொய்யாக உறுதிப்படுத்துதல்
குறித்த பொதியில் 70 ஆயிரம் டொலர், தங்க ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரம் இருப்பதாகவும் டொலரை பாசலில் அனுப்ப முடியாது இது சட்டவிரோதமானது எனவே இந்த பொதியை சுங்கதிணைக்களத்தில் இருந்து விடுவிக்க 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா தேவை என தெரிவித்துள்ளார்.
மேலும் பொதியில் உள்ள 70 ஆயிரம் டொலரை காணொளி எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி பணத்தை வங்கி ஊடாக அவசரமாக அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய குறித்த பெண் மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்கில் 95 ஆயிரம் ரூபாவை அனுப்பியுள்ளார்.
பின்னர் சுங்க திணைக்களத்தில் வேலை செய்வதாக நடித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்துள்ளார்.
அண்மை காலமாக வெளிநாட்டில் இருந்து பல இலச்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வந்துள்ளதாகவும் இதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என ஒரு இலச்சம் தொடக்கம் 6 இலச்சம் ரூபாவரை இவ்வாறான மோசடி கும்பலுக்கு பலர் பணத்தை அனுப்பி இழந்துள்ளனர்.
எனவே இவ்வாறான மோசடி
கும்பல் தொடர்பாக விழிப்பாகவும் அவதானமாகவும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

தனது Toronto சொகுசு வீட்டை விற்கும் சர்ச்சைக்குரிய கனேடிய எழுத்தாளர்: அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
