கணவரால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்
பெண் ஒருவரை மிகக் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை மின் கம்பத்தில் பெண்ணின் தலையை மோத குறித்த நபர் முற்பட்டுள்ளார்.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற போது பெருமளவிலான மக்கள் அங்கு இருந்த போதிலும், குறித்த பெண்ணை காப்பாற்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam
டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் Cineulagam