துயரில் இருந்து மீள முடியாது இரண்டு தசாப்தங்களாக வலியோடு வாழும் பெண் - உதவ யாருமின்றி தவிக்கும் அவலம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மனதளவிலும், உடல் அளவிலும் மீண்டெழ முடியாத சில வடுக்களுடன் தனது வாழ் நாளை கழிப்பதற்காக பலர் தினந்தோறும் போராட்டக்களத்தில் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
அந்த வகையில், இறுதிப்போரின் போது செல்வீச்சுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு இன்று தன்னுடைய தேவையை கூட சுயமாக செய்யமுடியாத ஒரு நிலையில் தனது மகள் வாழ்ந்து வருவதாக புதுக்குடியிருப்பு,கைவேலி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் செல்வராணி கண்ணீரோடு பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
மண்மீட்புப் போராட்டத்தின் போது செல்வீச்சினால் பாதிப்பட்ட நிலையில் கணவன் உயிரிழந்துள்ளார்.
அரசினால் வழங்கப்படும் 5000 ரூபாவில் தான் பிள்ளையின் மருத்துவச்செலவு மற்றும் பொருளாதாரத்தையும் பார்ப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri