திருமணமான மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி - மனைவியின் அதிரடி நடவடிக்கை
கம்பளை பிரதேசத்தில் திருமணம் முடிந்து மறுவீடு செல்லும் பயணத்தின் போது திருமண பந்தமே முடிவுக்கு வந்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
திருமணம் முடிந்து மணமகளுடன் வீட்டுக்கு வந்த மணமகன், நண்பருடன் சேர்ந்து பியர் குடித்ததால் கோபமடைந்த மனைவி கணவரை கொடூரமாக தாக்கி, காதை கடித்து துண்டாக்கியதுடன், உடலிலும் கீறியுள்ளார்.
அத்துடன் நிறுத்தாமல் கணவரின் சகோதரியை தாக்கி தாய் தந்தையரை திட்டி திருமண மோதிரத்தை கழற்றி திருமண பந்தத்தை முடித்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜோடி 7 வருட காதலின் பின்னர் திருணம் செய்துக் கொண்டுள்ளதாக கம்பளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மனைவி கம்பளையில் வசிப்பவராகும். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். கணவர் கலத பிரதேசத்தை சேர்ந்தவராகும். இவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.
கடந்த 5 நாட்களுக்கு முன் பெரும் பொருட்செலவில் இருவருக்கும் திருமணம் நடந்தது. புகைப்பட கலைஞருக்கு மாத்திரம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் தேனிலவுக்குப் பிறகு இருவரும் கணவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு கணவர் தனது நண்பரை சந்தித்து இருவரும் பியர் குடித்துள்ளனர். இதனால் கணவர் வீட்டிற்குள் வர அரை மணி நேரம் தாமதமாகியுள்ளது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த மனைவி வீட்டுக்கு வந்த கணவரை திட்டி, தாக்க ஆரம்பித்துள்ளார். இரத்தம் வழியும் வரை அவரது காதைக் கடித்துவிட்டு, அவரது உடலையும் தன் நகத்தால் கீறியுள்ளார்.
அத்துடன் கணவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தனது பெற்றோரை அழைத்து தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போது குறித்த பெண் தனது திருமண மோதிரத்தை கழற்றி திருமண பந்தத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
