யாழில் போதை மருந்து வில்லைகளுடன் பெண்ணொருவர் கைது(Photo)
யாழ்ப்பாணத்தில் போதை மருந்து வில்லைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இருந்து கைக்குழந்தையுடன் புல்மோட்டை பகுதிக்கு வந்த நிலையில் 777 போதை மருந்து வில்லைகளுடனும், 60 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் இருந்து புல்மோட்டை பகுதிக்கு போதை பொருட்களை பேருந்தில் கொண்டு சென்றுள்ளார்.
இதன்போது வழியில் தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து போருந்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
கைது செய்யப்பட்ட பெண் கொக்குளாய் பகுதியைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்ட
பெண்ணிடம் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்
சதுரங்க தெரிவித்துள்ளார்.



