இந்தியாவில் அரங்கேறிய மேலுமொரு கொடுமை: நோயாளர் காவு வாகனத்தில் தகாத முறைக்கு உட்டுத்தப்பட்ட பெண்
இந்திய உத்தரப்பிரதேச மாநிலத்தில் நோயாளர் காவு வாகனத்தில் இருந்து நோயாளியை வெளியே தள்ளிவிட்டு விட்டு, அவரது மனைவியை, குறித்த வாகன ஓட்டுநரும், உதவியாளரும் சேர்ந்து தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, குறித்த பெண்ணின் கணவரின் சுவாச கருவியையும் அந்த கொடூரர்கள் பிடுங்கியதால், அவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
கடும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்
மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையிலேயே, இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், காஸிபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிகிச்சை முடிந்த நிலையில், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது மனைவி வாடகை நோயாளர் காவு வாகனத்தை அழைத்து கணவருடன் பயணித்துள்ளார்.
இதன்போது, இடைநடுவில் வைத்தே குறித்த பெண்ணை வாகன ஓட்டுநரும் உதவியாளரும் தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், தமக்கு கொடுமை நேர்ந்தபோதும், சுவாசக்கருவி அகற்றப்பட்ட தமது கணவரை மற்றுமொரு வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதித்துள்ளார். இருந்தபோதும் அவர் அங்கு பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
