திருகோணமலையில் பெண் ஒருவர் கைது
திருகோணமலை(Trincomalee) - ஈச்சலம்பற்று பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை 12 கிராம் 11 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஈச்சலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(14.07.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் சுற்றிவளைப்பு
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று(14) காலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் முகத்துவாரம் பிரதேசத்தில் குறித்த கஞ்சா வியாபாரியான பெண்ணின் வீட்டை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிடுள்ளனர்.
இதன்போது, வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்து பெண்ணை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 12 கிராம் 11 மில்லிக்கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
