மஹியங்கனையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு
மஹியங்கனை, சேரனாகம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (29) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலக்கம் 99, திக்கொட, சேரனாகம பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்ணே இவ்வாறு காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த பெண் இன்று(29) காலை ஆறு மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மஹியங்கனை பிரதான வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[CU6ALEB ]

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
