யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே பலி
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவமானது இன்று(25) மாலை இடம்பெற்றுள்ளது.
நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய முகுந்தன் தீபா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
திசை திருப்புவதாக குற்றச்சாட்டு
குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளை எதிரில் வந்த கனரக வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த பெண்ணுடன் பயணித்த அவரது இரண்டு பிள்ளைகள் காயம் அடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மானிப்பாய் பொலிஸார் கனரக வாகனம் செலுத்தி சென்ற சாரதிக்கு பதிலாக வேறொருவரை கைது செய்து வழக்கினை திசை திருப்ப முற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
