யாழில் வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணத்தில்(Jaffna) தனியாக வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27.10.2024) இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் இந்திராணி (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மன விரக்தி
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியாக வாசித்து வந்த குறித்த பெண் மன விரக்தியில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
