தாய்லாந்தில் மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய பெண்
தாய்லாந்தின் பாங்காக் புறநகரில் அமைந்துள்ள வீடொன்றில் மிகப்பெரிய மலைப்பாம்பின் பிடியிலிருந்து பெண்ணொருவர் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் 64 வயதான பெண்ணொருவரே இதன்போது உயிர்தப்பியுள்ளார்.
இரண்டு மணி நேர போராட்டம்
தாய்லாந்தின் பாங்காக் புறநகரில் உள்ள ஒரு வீட்டில் 64 வயதான பெண் ஒருவர் தினசரி வேலைகளை செய்து கொண்டிருந்தபோது, 13 முதல் 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு அவரது தொடையை கடித்து, உடலை சுற்றி இறுக்கி, தரையில் தள்ளியுள்ளது.
இதன்போது, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, அந்த பெண் பாம்பின் பிடியிலிருந்து விடுபட போராடிய நிலையில், இறுதியில் அவரது அலறல் சத்தத்தை கேட்ட அயலவர்கள், அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள், பாம்பின் தலையில் தாங்கி, அதன் பிடியிலிருந்து பெண்ணை விடுவித்துள்ளனர்.
எனினும், மலைப்பாம்பினால் குறித்த பெண் காயங்களுக்கு உள்ளான நிலையில், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.