மன்னாரில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
மன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டை நேற்று (28) சோதனையிட்ட போது ஒரு கிலோ 30 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு குடும்ப பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண் நீண்ட காலமாக இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபரை இன்று (29) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட Rare Earth கனிமங்கள்., சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க திட்டம் News Lankasri
