போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது!
பெருந்தொகையான போதை மாத்திரைகள் மற்றும் பணத்துடன் பெண்ணொருவர் கல்கிஸ்ஸைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தெஹிவளைப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கல்கிஸ்ஸை குற்றத் தடுப்புப் பிரவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அதன்போது சுமார் ஐயாயிரம் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் ஐந்து லட்சம் ரூபா அளவில் இருக்கும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபா பணமும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த பணம், போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் கிடைத்தாக சந்தேகிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவ்வீட்டில் குடியிருந்த பெண் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் இதற்கு முன்னரும் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு வழக்கொன்றை எதிர்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கல்கிஸ்ஸைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



