காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மழையுடன் கூடிய காலநிலை தற்போது நிலவுவதால், மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (09.10.2023) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்களுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பலத்த காற்று எச்சரிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 17 மணி நேரம் முன்

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
