பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் ஏப்ரல் மாதம் இறுதி வரை அல்லது மே மாதம் ஆரம்பம் வரை தக்காளி பெரும் பற்றாகுறையாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காமில் நடந்த தேசிய விவசாயிகள் சங்க மாநாட்டின் போது, தக்காளிகள் பறிக்கத் தயாராவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என APS தயாரிப்பின் குழு மேம்பாட்டு இயக்குநர் Phil Pearson தெரிவித்துள்ளார்.
ஆகையினால், "மார்ச் இறுதியில் அறுவடை தொடங்குவதற்குப் பதிலாக, இது ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல வாரத்தில் அறுவடை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தக்காளி பற்றாகுறை
இதேவேளை விநியோக பற்றாகுறை காரணமாக பிரித்தானியாவின் முன்னணி பல்பொருள் அங்காடிகளான டெஸ்கோ மற்றும் ஆல்டி உள்ளிட்டவைகள் வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய சில பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு வரம்புகள் விதித்துள்ளன.
எரிசக்தி மற்றும் எரிவாயு மூலம் பெறப்படும் உரம் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருவதால், பிரித்தானிய விவசாயிகள் குளிர்காலத்தில் கண்ணாடிக் கூடங்களில் தக்காளிகளை நடுவதைத் தடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
