உலக வங்கியின் எச்சரிக்கை! 2024 வரை நீடிக்கும் பற்றாக்குறை
ரஷ்யா-உக்ரைன் போரினால் உருவான உலகளாவிய உணவு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை 2024 வரை நீடிக்கும் என்று உலக வங்கி கூறுகிறது.
1970ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமே மிகப் பெரிய பொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்கிறார்கள்.
கடுமையான உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஆகியவை உலகின் பல பகுதிகளில் பணவீக்கத்தை உயர்த்தியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
ரஷ்யா உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு மற்றும் உர ஏற்றுமதியாளராகவும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாகவும் உள்ளது.
பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைனில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததில் இருந்து பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செயல்முறை சீர்குலைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.