மன்னாரில் வலைகளில் சிக்கும் ஒரு வகையான சிவப்பு நண்டு: கடற்றொழிலாளர்கள் கவலை
மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம கடற்றொழிலாளர்கள், தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கப்படும் ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார் கிராமங்களை கொண்ட பகுதியாகும். இவற்றில் தாழ்வுபாடு கிராமமும் ஒன்றாகும்.
குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக' சிவப்பு நண்டு' என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இந்த நண்டுகள் கடற்றொழிலாளர்களின் வலைகளில் பாரியளவில் சிக்குவதால் கடற்றொழிலாளர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளன. குறித்த நண்டை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 15 வருடங்களுக்கு முன் குறித்த சிவப்பு நண்டு, இப்பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அதன் பிற்பாடு இந்த ஆண்டு இவ்வாறு வருகை தருவதாகவும் இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் கடற்றொழிலாளர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
